பழனி தெரசாம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த தோமையார் மற்றும் அவர் தெருவை சேர்ந்த நண்பர்கள் உடன் சம்பவத்தன்று இரவு மது அருந்துவதற்காக கோதைமங்கலம் சாலையில் உள்ள மதுபான கடைக்கு வந்த பொழுது, திடீரென அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், தோமையாரை உடன் வந்த ஐந்து நபர்கள் கடுமையாக தாக்கி அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர் என தகவல்..கொலை செய்யப்பட்ட சின்னதம்பி (எ) தோமையார் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த கொலை சம்பவத்தை பற்றி தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, பழனி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை கண்காணித்து, கொலை நடந்த ஒரு சில மணி நேரத்தில் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்திகள் : J.இமாம் தலைமை செய்தியாளர் பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *