தேனி நாட்டத்தி நாடார் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 16.11.2025 அன்று நடத்தப்பட்டது.

இம்முகாமில் 226 குழந்தைகள் கலந்துகொண்டனர், இம்முகாமில் 900 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது, அக்குழந்தையை பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவக்குழுவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

முகாமில் கலந்துகொண்ட நமது மருத்துவமனையின் சிறப்புமருத்துவர்கள்
Dr . குமார் ஆனந்த் – பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்
Dr . ஜெயக்குமார் – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . சாய் சந்தோஷ் – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . சூரஜ் அசாருதீன் – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . ரோகினி – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . முத்துப்பாண்டி – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . ராமலிங்கம் – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . ரகு – குழந்தைகள் நல மருத்துவர்
Dr . இலக்கியா – குழந்தைகள் நல ஊட்டசத்து மருத்துவர்
Dt . ஜெயப்பிரபா – உணவியல் ஆலோசகர்
இம்முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனையின் செயலாளர் திரு. கமலக்கண்ணன், மருத்துவமனையின் மேலாளர் செல்வி. சாந்தி, மருத்துவமனையின் நிர்வாகத்தினர் மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் திரு. சேக் பரீத் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *