கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது.கடந்த 10 மாதங்களாக இந்த திட்ட அறிக்கைகள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஒன்றிய அரசு தற்போது, மக்கள் தொகையை காரணம் கூறி இந்த 2 திட்டங்களையும் நிராகரித்து திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நகரின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு, கோவையின் மக்கள் தொகை 15.8 லட்சமும் மதுரை மக்கள் தொகை 10 புள்ளி 2 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் இதே அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் குஜராத்தில் சூரத் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *