2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 60-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று இருக்கின்றார். விரைவில் அவர் தன்னுடைய நூறாவது பதக்கத்தை வெல்லவும், அதையும் தாண்டி பல வெற்றிகளை குவிக்கவும் நாம் அத்தனைபேரும் நம்முடைய வாழ்த்துகளை கைத்தட்டல்கள் மூலம் தெரிவித்துக் கொள்வோம்.அவரைப் போலவே இன்னொரு விளையாட்டு வீரரும் இங்கே வந்திருக்கின்றார். செஸ் விளையாட்டு வீரர் தம்பி இளம்பரிதி இங்கே வந்திருக்கின்றார். தம்பி இளம்பரிதி இந்தியாவினுடைய 90th Chess Grandmaster. அதேமாதிரி தமிழ்நாட்டினுடைய 35th Grand Master. 4 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த தம்பி இளம்பரிதி, இன்றைக்கு இந்தியாவிலேயே மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்றால், தம்பி இளம்பரிதி அவர்கள்தான். இன்றைக்கு, உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பதக்கங்களை வென்று இன்றைக்கு இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கும் நாம் அத்தனைபேரும் நம்முடைய கைத்தட்டல்கள் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.இன்றைக்கு விளையாட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்ற அந்த இரண்டு பேரும் நாம் அத்தனைபேருக்கும் ஒரு Role Model, ஒரு inspiration அதை மறந்துவிடாதீர்கள். இவர்களுடைய வெற்றிப்பயணம் தொடர நம்முடைய தமிழ்நாடு அரசு என்றைக்கும் துணை நிற்கும்.அவர்களை போலவே இன்றைக்கு நிறைய வீரர்கள் உருவாக வேண்டும் என்று தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, நாம் அதை செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம்.இந்த திட்டத்திற்கு முதலில் ஏன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை வைத்தோம் என்றால், கலைஞர் அவர்களுக்கு விளையாட்டில் இருந்த அந்த ஆர்வத்தின் காரணமாகதான் வைத்தோம். அரசியல் தலைவராக கலைஞர் அவர்கள் இருந்தாலும், மிகப்பெரிய ஒரு Sportsman ஆகவும் இருந்தார்.
கால்பந்து, கிரிக்கெட் என்று எந்த போட்டிகள் நடந்தாலும் அதில் ஒரு ஆர்வம் இருக்கும், அதை தவறாமல் பார்த்துவிடுவார்.தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதும்போது கூட விளையாட்டு சார்ந்த உதாரணங்களை நிறைய எழுதுவார். குறிப்பாக, உதாரணத்திற்கு “நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்” என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவார். எந்த துறையை எடுத்து கொண்டாலும், எல்லாரிடமும் ஒற்றுமை உணர்வும், சகோதரத்துவமும் வளரவேண்டும் என்றால், அதற்கு Sportsman ship மிக, மிக முக்கியம். ஏன் என்றால், விளையாட்டைப் பொருத்தவரைக்கும் ஒரு டீமில் இருக்கக்கூடிய அனைவரும் ஒரே ஜெர்சியை போட்டுக்கொண்டால், அவர்கள் எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள். அவர்களுக்குள் இருக்கக்கூடிய மத வேறுபாடு, சாதி வேறுபாடு, பொறாமை எல்லாமே மறைந்து போய்விடும். அது தான் விளையாட்டுக்கே இருக்கக்கூடிய மிகப் பெரிய ஒரு பவர்.விளையாட்டு திறமையாளர்கள், தமிழ்நாட்டினுடைய எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், அவங்களை கண்டுபிடித்து, அவர்களை எல்லாம் சாதனையாளர்கள் ஆக்குகின்ற அந்த முயற்சியில் இந்த அரசும் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றோம். இது மாதிரியான, திறமையாளர்களை கண்டறியதான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளையும் ஆண்டுதோறும் நடத்துகின்றோம்.
கடந்த நான்கு வருடங்களாக, இதுவரைக்கும் இல்லாத அளவில் அதிக பேர் கலந்து கொண்ட ஒரு போட்டி என்றால், அது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிதான்.அதுவும் செங்கல்பட்டு மாவட்டம், மிக, மிக முக்கியமான சிறப்புக்குரிய மாவட்டம். ஏன் என்றால், ஒவ்வொரு ஆண்டும், பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், இரண்டாம் இடத்தில் நம்முடைய செங்கல்பட்டு மாவட்டமும் ஒவ்வொரு ஆண்டும் அந்த சாதனையை படைத்துக் கொண்டு வருகிறீர்கள். இந்த ஆண்டும் இரண்டாமிடம், அடுத்த ஆண்டு நிச்சயமாக முதலிடத்திற்கு முயற்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
