திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த
மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு ரயிலில்
திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட போது
முன்பதிவு இல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை மேற்கொண்டபோது அதில் 3.700 கிலோ கஞ்சா மற்றும் 22 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது அதனை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்திகள் : J. இமாம்.தலைமை செய்தியாளர் பழனி.
