தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் ஒரு வாரமாக காணாமல் போனதாக சொல்லப்பட்ட நிலையில், கை, கால் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு…



