மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இருந்து இப்படியான அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை என நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், முதன்முறையாக 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடன் தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்துப் பேசிய அவர், விஜயை நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இதையடுத்து, தேசிய கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் இப்படிப் பேசலாமா?

 என அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் நயினார் நாகேந்திரன் கருத்துக்குக் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதேசமயம், நயினார் நாகேந்திரன் தான் பேசிய கருத்து குறித்து எந்த மறுப்போ அல்லது மன்னிப்போ கேட்காமலேயே இருந்து வருகிறார்

இந்த சூழலில்தான், நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இருந்து இப்படியான அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, ’எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில்லை எனவும் அரசியல் நிலைப்பாட்டில் நடுநிலையுடன் இருக்கவே விரும்புகிறேன்’ எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், ’எனது நடிப்புத் திறமையால் அடையாளம் காணப்பட விரும்புகிறேன். அரசியல் அடையாளம் எனக்கு தேவையில்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *