

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேனியில் உள்ள நலச்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு.P. நல்லமுத்து, மாவட்ட செயலாளர் திரு.S. கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் திரு.S ரத்தின சபாபதி, துணைச் செயலாளர் திரு.P. அழகர்சாமி, விழா குழு தலைவர் திரு.N. கிருஷ்ணன், துணைத் தலைவர் திரு.I. முத்துராமலிங்கம் மற்றும் சங்க ஆலோசகர்கள், உட்கோட்ட செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தேசீயக் கொடியை திருமதி.M.
நிர்மலா தேவி காவல் ஆய்வாளர் (ஓய்வு) அவர்கள் ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்கள் மாவட்டத் தலைவர் திரு.P. நல்லமுத்து அவர்கள் உரையாற்றும் போது, விரைவில் நலச் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

