கும்மிடிப்பூண்டி ஏலாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி(18) என்பவர் அவரது நண்பர்களான கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த தேவகி செல்வம், பவானி, காயத்ரி உள்ளிட்ட நான்கு நபர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஷாலினி ப.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இவர் பகுதி நேரமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரோடு தேவகி செல்வம், பவானி, காயத்ரி ஆகிய மூவரும் அதே துணிக்கடையில் பணிபுரிந்து வந்த போது பழக்கம் ஏற்பட்டு பின்பு நண்பர்கள் ஆனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு ஷாலினி, தான் பகுதி நேரமாக பணிபுரியும் துணி கடைக்கு சென்று அங்கு இருந்த மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு ரயில் மூலமாக சென்னை எண்ணூர் கடற்கரைக்கு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நான்கு நபர்களும் கடற்கரைக்கு வந்த நிலையில் கடலில் இறங்கி குளிக்க முற்பட்டபோது, அதில் ஒருவர் அலையில் சிக்கியதும், அடுத்த நபர் காப்பாற்ற முற்பட்டுள்ளார். இதேபோல நான்கு நபர்களும் கடலலையில் சிக்கி உயிரிழந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *