தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அரபிக்கடலில் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல்பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 6நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேகஇடங்களிலும், சில இடங்களில் கனமழையும்பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 24மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,மயிலாடுதுறை, திருவண்ணாமலை,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,திருநெல்வேலி, விருதுநகர், தேனி,கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி,கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, ஈரோடு,கடலூர், விழுப்புரம், ஆகிய 24 மாவட்டங்களில்லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
