பைசன்
கபடி விளையாட்டு பின்னணியில், 1994ல்நடந்த ஜாதி பிரச்னைகள், சண்டைகள்,சமூகநிலையை கலந்து மாரிசெல்வராஜ் விளையாடியிருக்கும் ஆட்டம் பைசன்.தூத்துக்குடி மாவட்ட கிராமத்தில் வசிக்கும் துருவ் விக்ரமுக்கு கபடியில் சாதிக்கவேண்டும் என்பது கனவு. ஆனால், அவரைஉள்ளூர் அணியில் கூட சேர்க்கமறுக்கிறார்கள். ஆனாலும், ஒரு நல்லவாத்தியார் துணையுடன் அந்த அணியில் சேர்ந்து தனது திறமையை நிரூபிக்கிறார்.கபடியில் ஸ்டார் ஆகிறார். தமிழக அணி,இந்திய அணியில் சேர்ந்து விளையாடநினைக்கிறார்.அங்கே ஏகப்பட்ட பாலிடிக்ஸ். இதற்கிடையேதென்மாவட்டத்தில் அமீர் (பசுபதிபாண்டியன்கேரக்டர்), லால் (வெங்கடேச பண்ணையார்கேரக்டர்) ஆகியோர் இடையேயான பகை, மோதல்களால் துருவ் வாழ்க்கையும்,எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இந்தஇரண்டு சிக்கல்களில் இருந்து அவர்மீண்டாரா? ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடிபோட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி, அணியை ஜெயிக்க வைத்தாராஎன்பது பைசன்/காளமாடன் கதை.

தேசியவிருது பெற்ற சீயான் விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து இருக்கிறார் துருவ்விக்ரம். கபடி வீரராக அவர் ஆடுகிற ஆட்டம்,சமூக நிலையில் ஏற்படும் அவமானங்களால் கொந்தளிக்கும் இடம், அநீதிக்கு எதிராக பொங்குகிற இடம், ஏமாற்றம், துரோத்தால் பாதிக்கப்பட்டு கலங்குகிற இடம், காதல்,அப்பா பாசம் என பல இடங்களில் ஸ்கோர்செய்து, தன்னை சிறந்த நடிகராக நிலைநிறுத்தி இருக்கிறார். அவர் அப்பாவாகவருகிற பசுபதி, நம் நிஜ வாழ்க்கையில்பார்க்கும் கோபக்கார, பாசக்கார, மகன் மீது அக்கறை உள்ள அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார்.
அவருக்கு பல விருதுகள் நிச்சயம். துருவ் அக்காவாக வரும் ரஜிஷாவிஜயன் கெட்அப்,அந்த ஸ்லாங், நடை, உடை நெல்லை பெண்ணாக மாற்றியிருக்கிறது. காதலியாகவரும் அனுபமாவும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் போல்டாக நடித்துஇருக்கிறார். பாண்டியராஜாவாகவரும் அமீரின் சினிமா வாழ்க்கையில் இதுமுக்கியமான படம். அவரின் கெத்து, சமூகம்குறித்த வசனங்கள், ஒரு திருமண வீட்டில்அவர் நடக்கும் விதம், அவரின் முடிவு சீன்கள்பரபரப்பு, கந்தசாமியாக வாழ்ந்திருக்கும் அண்ணாச்சிலாலும், அதிகம் அலட்டாமல் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார்.அவரின் பார்வை, சில குணம் பெரியமதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களை தவிர,வாத்தியாராக நடித்த அருவி மதனுக்கு பாராட்டுகள் நிச்சயம். இந்தி கபடி அதிகாரி,கபடி கேப்டன், கபடி தேர்வு குழுவை சேர்ந்த அழகம்பெருமாள், ஊர் மக்கள், பெரிசுகள் எல்லாரும் இயல்பாக, கதையோடு ஒன்றி
நடித்து இருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பை,1993, 94 வாழ்க்கையை அப்படியே, அழகாகபதிவு செய்து இருக்கிறார் எழில் அரசு.நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசைபாடல்கள் படத்தை இன்னும்உயிர்ப்பாக்குகிறது. படத்தில் ஆங்காங்கேவரும் சாட்டையடி வசனங்கள், கபடி காட்சிகள் வன்முறை காட்சிகள், கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக இருக்கிறது. படத்தின் நீளமும்மைனஸ், காமெடி, கலர்புல் காதல் காட்சிகள்இல்லை. ஆனாலும், ஜாதியை பற்றி பேசும்படமாக இருந்தாலும், ஜாதி படமாக இல்லாமல், எந்த தரப்பை தவறாககாண்பிக்காமல் சொன்னது பிளஸ்.குறிப்பாக, ஒரு இளைஞன் முன்னேறணும்.அவன் கபடி ஜெயிக்கணும் என்று அமீர், லால் என்ற இரண்டு ஜாதி தலைவர்களும் பாசிட்டிவ் சிந்தனையுடன் இருப்பதும்,அவர்கள் செயல்பாடுகளும் படத்தின்உயிரோட்டம். இந்த விஷயத்தில்மாரிசெல்வராஜ் கண்ணோட்டம்,இளைஞர்கள் மீதான அவரின் பாசப்பார்வை பாராட்டப்படக்கூடியது. ஒரு கிராமத்து இளைஞன் எப்படி போராடி ஜெயிக்கிறான்.கபடியில் எப்படி பெயர் எடுத்தான் என்பதை அர்ஜூனா விருது பெற்ற மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி, கற்பனை கலந்து எடு
க்கப்பட்ட படம் பைசன். இந்த ஆண்டின்தரமான படங்களில் ஒன்றாகவும், துருவ்விக்ரமுக்கு வெற்றி படமாக அமைகிறது.
