திருப்பூர், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில், ஆட்டோவில் பயணித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண், பிரசவ வலியால் துடித்து கதறியுள்ளார்.

உடனடியாக ஆட்டோவை நிறுத்தி விசாரித்தபோது, அப்பெண் பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு செல்வது தெரியவந்தது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பிரசவம் ஆகிவிடும் என்ற நிலை ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோகிலா, ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார்.
கோகிலா ஏற்கனவே நர்சிங் படிப்பை முடித்து எட்டு மாதங்கள் பயிற்சி பெற்றிருந்ததால், அவரால் பிரசவத்தை வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது.