ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏறப்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பிரதமர் மோடி தன்னை அழைத்து கிஷ்த்வாரில் நிலைமை குறித்து விசாரித்ததாகவும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இந்த துயரச் சம்பவம் குறித்து பேசுகையில், “500க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்.
சில அதிகாரிகள் இந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்று கூறுவது கவலையளிக்கிறது.என்று கூறினார்.