தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவுக்கு – 27 தொகுதிகளும், பாமகவுக்கு – 18 தொகுதிகளும், அமமுகவுக்கு – 11 தொகுதிகளும், த.மா.காவுக்கு 5 இடங்களும், இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் புதிய நீதிக்கட்சிக்கு தலா 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 167 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் அதிமுக அவர்களுடைய வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக 23 பேர், இரண்டாம் கட்டமாக 127 பேர் என வெளியிட்டது. அந்தவகையில் இன்று 17 பேருக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

மொத்தம் 167 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் அதிமுக அவர்களுடைய வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக 23 பேர், இரண்டாம் கட்டமாக 127 பேர் என வெளியிட்டது. அந்தவகையில் இன்று 17 பேருக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டியிருக்கும் பட்டியலின் படி,

1. ஆயிரம் விளக்கு – பா. வளர்மதி

2. அண்ணாநகர் – எஸ். கோகுல இந்திரா

3. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – ஆதி ராஜாராம்

4. திட்டக்குடி (தனி) – என். முருகுமாறன்

5. துறைமுகம் – ராயபுரம் ஆர்.மனோ

6. விருகம்பாக்கம் – விருகை வி.என்.ரவி

7. தியாகராய நகர் – பி.சத்திய நாராயணன்

8. வேளச்சேரி – எம்.ஏக்.அசோக்

9. சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்

10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஆர்.எஸ். ராஜேஷ்

11. வில்லிவாக்கம் – எஸ்.ஆர்.விஜயகுமார்

12. திருச்சுழி – எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்

13. ஆலந்தூர் – எஸ். சரவணன்

14. கொளத்தூர் – பி. சந்தானகிருஷ்ணன்

15. திரு.வி.க. நகர் (தனி) – ஏ.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

16. எழும்பூர் (தனி) – அபிஷேக் ரங்கசாமி

17. ஆலங்குடி – தன.விமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *