மகளிர் உரிமைத் தொகையை முடக்க ஒன்றிய பாஜக அரசும், அதன் கூட்டணிக்கட்சியான அதிமுகவும் தீட்டிய சதியை முன்கூட்டியே அறிந்து முறியடித்து 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை முன்பணம் ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகுப்பு ரூ 2000 என மொத்தம் ரூ.5000 வழங்கியதோடு, தொடர உள்ள திராவிட மாடல் அரசில் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்

முதலமைச்சர் அவர்கள். இந்த செய்தி அனைத்து பெண்களிடமும் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களை பயனாளிகளாக மட்டும் எண்ணாமல், தமிழ்நாட்டு வளர்ச்சியின் பங்குதாரர்கள் என முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு என்பது மகளிருக்கு முதலமைச்சரின் செய்தியாக தெரிவிக்கப்படுகிறது.
