கர்நாடக மாநிலம் விஜயபுராவில், பயிற்சி விமானம் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி மற்றும் பயணி பாராசூட் மூலம் உயிர்தப்பினர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தனியார் பயிற்சி விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கலாபுரகியிலிருந்து பெலகாவி நோக்கிச்சென்ற, இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம், பாபலேஸ்வர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்களூரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியது.


விமானம் தரையில் மோதும் முன்பே அதிலிருந்த விமானி உள்ளிட்ட இருவர் பாராசூட் மூலம் வெளியேறியதால் உயிர்தப்பினர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து சிதறியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *