திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 10க்கும் மேற்பட்ட வழக்கில் சம்மந்தபட்ட பல நாட்களாக காவல்துறையால் தேடப்பட்டு வந்த பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த விஜய் பழனியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்

டிஎஸ்பி தனன்ஜெயன் உத்தரவின் படி காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சார்பு ஆய்வாளர் திரு விஜய் தலைமையில் காவலர்கள் மஹேஸ்வரன், செல்வகுமரன், செந்தில்முருகன், அழகுமணி, மணிகண்டன், முத்துமாரி, சக்திகணேஷ் போன்ற 10க்கும் மேற்பட்ட காவலர்கள் உழவர் சந்தை பகுதியை காவல் துறையினர் நான்கு புறமும் சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் கஞ்சா விற்பனையாளர் விஜய் காவல்துறையை கண்டவுடன் அருகில் இருந்த சுவரில் ஏறி குதித்து தப்பி ஓட முயற்சி செய்தார் உடனடியாக அவரை சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர் மணிகண்டன் மற்றும் மஹேஸ்வரன் உள்ளிடோர் விரட்டி மடக்கி பிடித்தனர் பின்பு அவர் இருவரை சோதனை மேற்கொண்டத்தில் அவர்களிடம் இருந்து சுமார் ¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனார். செய்திகள் : J.இமாம் தலைமை செய்தியாளர் பழனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *