வாரணாசி: ‘பொது இடத்தில் எச்சில்துப்பினால், 250 ரூபாய் அபராதம்விதிக்கப்படும்’ என உத்தர பிரதேசத்தின்வாரணாசி மாநகராட்சி அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.,ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசிலோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடிபோட்டியிட்டு வென்றார். மாநகராட்சியானவாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும்வகையில், திடக்கழிவு மேலாண்மை மற்றும்சுகாதார விதிகளை மாநகராட்சி நிர்வாகம்புதிதாக அமல்படுத்தியுள்ளது.

வாரணாசி நகராட்சியின் பொதுமக்கள்தொடர்பு அதிகாரி சந்தீப்ஸ்ரீவாஸ்தவா,”உத்தர பிரதேச திடக்கழிவுமேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021)வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி, பொது இடங்களில் எச்சில்துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடிகுப்பையை வீசினாலோ எச்சில்துப்பினாலோ ரூ.1,000 அபராதம்விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள்வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்டபொது இடங்களில் குப்பை கொட்டினால்ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால்ரூ.750, குப்பைகளை மூடப்படாத லாரிகளில்எடுத்துச் சென்றால் ரூ.2,000 அபராதம்விதிக்கப்படும்,” என்றார்.
