சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் ஊனத்தூர் பகுதியில் அருந்ததியர்சமூகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது23-10-2025 அன்று இரவு சிறுவாச்சூர் ஆதிதிராவிட தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்தந்தை சக்திவேல் மற்றும் அவரது தாய் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள்கொடூரமான தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. காலைபேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இரவில் ஆயுதங்களுடன்அருந்ததியர் பகுதியில் புகுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட மக்களைகடுமையாக தாக்கி காயங்கள் மற்றும் சொத்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்

.இதுகுறித்து 24-10-2025 அன்று தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவர் இன்று வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள்மீதே காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் சேர்ந்துஆதித்தமிழர் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமிதலைமையில் 29-10-2025 அன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. : செய்தியாளர். மா.அருநேரு தலைமை செய்தியாளர் தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *