(01.10.2025)
உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில் செயலாளர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மருத்துவமனையின் மேலாளர் செல்வி. சாந்தி, நட்டாத்தி நர்சிங் கல்லூரி முதல்வர் திருமதி. லாலி மோல், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் மருந்து ஆளுநர்கள், நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் Dr. கமலேஷ் , Dr.நிவாஸ் Dr. இராஜ கணபதி, Dr. ராகுல் ஆகியோர் இருதயம் பற்றிய விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர். இருதய ஊர்வலத்தின் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மேலாளர் திரு. சேக் பரீத், கணக்காளர் திரு. முருகேசன் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்…
