புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவையில் ஆயுத பூஜையையொட்டி புதன்கிழமையும், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று வியாழக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து நாளையும் (அக்.3) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு மொத்தம் 5 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வெள்ளிக்கிழமைக்கு பதிலாக மற்றொரு நாள் பணி நாளாக இருக்கும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *