
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட காசிம் வயல் பகுதியில் வசித்து வந்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் அலி (38) மீன் என்ற மீன் வியாபாரி திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஜெனிபர் கிளாடிசுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெனிபர் கிளாடிசின் வீட்டுக்கு அலி அடிக்கடி சென்று வந்துள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஜெனிபர் கிளாடிஸ் அலியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல அலி நேற்று இரவு ஜெனிபர் கிளாடிசின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அலி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்றும் ஜெனிபர் கிளாடிஸ் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அலி கத்தியால் ஜெனிபர் கிளாடிசின் கழுத்துமற்றும் கையில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் அலி கத்தியுடன கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் அலி மீது வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ஜெனிபர் கிளாடிசின் உடலை உடற்கூராய்விற்காக கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கூடலூர் பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.