Image default
Uncategorized

திண்டுக்கல் : கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 22 வாகனங்கள் எரிந்து நாசம்……!

திண்டுக்கல் – பழனி சாலையில் உள்ள கொட்டப்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான மேக் ஆட்டோ ஒர்க்ஸ் ஷாப் செயல்பட்டு வருகிறது. இந்த ஒர்க் ஷாப்பில் பழைய கார், ஜீப், சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாத நிலையில், வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய காரிலிருந்து புகை வர ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து கார் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அருகில் இருந்த கார்களுக்கும் தீ பரவியதால் ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஜீப், சரக்கு வேன் உட்பட 22 வாகனங்களுக்கு தீ பரவியது .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வண்டிகளை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து சேதமானது.


Related posts

திண்டுக்கல், கொடைக்கானல் கீழ்மலை அருகே மூலையார் பகுதியில் ஆற்றுப்பாலத்தில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம் போலீசார் விசாரணை…!

crimefactnews@gmail.com

திருவாரூர் அருகே தனியாக இருந்தபெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தவிவகாரத்தில், குற்றம் நடந்த 12 மணி நேரத்தில், கேபிள்ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

crimefactnews@gmail.com

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில்…!

crimefactnews@gmail.com

Leave a Comment