Image default
Uncategorized

செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…! நடந்தது என்ன….?

சென்னையில் நடந்த கார் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.  மதுரை ஜானகி நகர் பதும்பூர் சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கார்த்திக். சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கார்த்திக், அவரது மனைவி நந்தினி, அவர்களது குழந்தைகளான 7 வயது சிறுமி இளமதி, ஒரு வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார், அவரது மனைவி தெய்வபூஞ்சாரி மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 7 பேரும் பங்கேற்று விட்டு  ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள திருத்தேரி சிக்னலில் இவர்களது கார் நின்றது. அப்போது அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக காரின் பின்னால் பயங்கரமாக மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, கார் ஓட்டுநர் சரவணன், அய்யனார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், கார்த்திக், நந்தினி, தெய்வபூஞ்சாரி, இளமதி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்டு படுகாயமடைந்தவர்களை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் உயிரிழந்த 3 பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிாந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

நாகர்கோவில்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது….!

crimefactnews@gmail.com

கொடைக்கானல் : கடந்த சில தினங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட வனத்துக்குள் நுழைந்த மாணவர்களுக்கு ரூ.14,000 அபராதம் விதிப்பு……!

crimefactnews@gmail.com

தேனியில் GPAY மூலம் பணம் செலுத்தும் நபர்களுக்கு மொத்தமாக கஞ்சா சப்ளை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல்துறையினர்…..!

crimefactnews@gmail.com

Leave a Comment